இந்தியா

ஒரே வீட்டில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 199 பேர்

Published On 2023-11-15 11:02 GMT   |   Update On 2023-11-15 11:02 GMT
  • உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சனை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு சியோனா சானா தனது 76-வது வயதில் மறைந்தார்.
  • அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவார்கள் என அப்பகுதி மக்கள் கூறினர்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை குறைந்து கொண்டே வரும் இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 199 பேர் ஒரே வீட்டில் வசித்து வருவதும், அந்த வீடு சுற்றுலா தலமாக மாறி இருப்பதும் பேசு பொருளாகி இருக்கிறது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள பக்தவாங் கிராமத்தில் தான் இந்த மிகப்பெரிய குடும்பம் உள்ளது. சியோனா சானா என்பவர் தான் இந்த குடும்பத்தின் தலைவர் ஆவார். 38 பெண்களை மணந்த அவருக்கு அந்தந்த மனைவிகள் மூலம் 89 குழந்தைகள் மற்றும் 36 பேரக் குழந்தைகள் உள்பட இந்த குடும்பத்தை சேர்ந்த 199 பேர் ஒரே வீட்டில் இருந்தனர். இவர்கள் அனைவரும் பக்தவாங் கிராமத்தில் 100 அறைகள் கொண்ட 4 மாடி கட்டிடத்தில் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சனை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு சியோனா சானா தனது 76-வது வயதில் மறைந்தார். அதன் பிறகும் அந்த குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து பாரம்பரியத்துக்கு சான்றாக விளங்குகிறார்கள்.

சியோனா தனது முதல் மனைவியை 17 வயதில் திருமணம் செய்தாராம். அதன் பிறகு ஒரே வருடத்தில் 10 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு மனைவிகளுக்கும் தனி படுக்கை அறை மற்றும் தங்குமிடம் அமைத்து கொடுத்தாலும், ஒரே வீட்டில் தான் வசித்துள்ளனர். அவர் எல்லா நேரங்களிலும் 7 அல்லது 8 மனைவிகளை பக்கத்தில் வைத்திருப்பதை விரும்புவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பரந்து விரிந்த டைனிங் ஹாலில் முழு குடும்பமும் கூடி சாப்பிடும் போது அது ஒரு பெரிய ஹாஸ்டல் மெஸ் போல இருக்கும். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவார்கள் என அப்பகுதி மக்கள் கூறினர்.

Tags:    

Similar News