இந்தியா

பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் பலி

Published On 2023-07-15 21:02 GMT   |   Update On 2023-07-15 21:02 GMT
  • பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
  • இறந்தோர் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.

பாட்னா:

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

ரோடாஸ் மாவட்டத்தில் 5 பேர், அவுரங்காபாத், பக்சர் மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்தனர். அர்வால், கிஷன்கஞ்ச், கைமூர், வைஷாலி, ஷிவன், பாட்னா, அராரியா, ஷரண் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகினர்.

மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அத்துடன் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சீற்றங்களின்போது பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

Similar News