கதம்பம்

இவற்றில் சிக்கி கொள்ளாதீர்கள்...

Published On 2023-07-24 11:12 GMT   |   Update On 2023-07-24 11:12 GMT
  • பயம், பதட்டம், கோபம், பரபரப்பு, ஆதங்கம் இவற்றிற்கு அடிமையானவர்களே நோயாளிகளாக மாறுகிறார்கள்.
  • தற்போதைய நேரத்தில் நல் சிந்தனை நற்செயலில் கவனம் செலுத்தி பயிற்சி எடுங்கள்..

பயம், கோபம், பதட்டம், பரபரப்பு இவை எல்லாம் நம் உடலில் இயல்பாக நடைபெறும் வளர்சிதை மாற்றத்தில் இடையூறு ஏற்படுத்தி நம் முக்கிய உறுப்புகளை செயல் இழக்க வைக்கிறது.

ஒரு செயலை நினைத்தோ ஒரு நபரை நினைத்தோ உங்களுக்கு பயம், கோபம், பதட்டம், ஆதங்கம் வருமானால் உங்கள் உடல் பாதிப்படைந்து உங்களுக்கு நோய் வர போகிறது என தெரிந்துகொள்ளுங்கள்.

மற்றவர்கள் உங்கள் மீது தீயது நினைத்தாலும் நீங்கள் அவர் மீது நல்லதே நினையுங்கள்.. அவர் தீய விசயங்களுக்கு பயற்சி எடுக்கிறார், நீங்கள் நல்ல விசயங்களுக்கு பயிற்சி எடுக்கிறீர்கள்..

அடுத்த நொடி அடுத்தடுத்து வரும் நேரங்களை உங்களின் தற்போதைய பயிற்சிதான் முடிவு செய்ய போகிறது.. தீயது நினைத்தவர்தான் எதிர்காலத்தில் நோயாளியாக போக போகிறார்.

பயம், பதட்டம், கோபம், பரபரப்பு, ஆதங்கம் இவற்றிற்கு அடிமையானவர்களே நோயாளிகளாக மாறுகிறார்கள்.

இறந்தகாலம் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் இருப்பவர்களே பயம், பதட்டம், கோபம், பரபரப்பு, ஆதங்கம் இவற்றில் சிக்கி கொள்கிறார்கள்.

தற்போதைய நேரத்தில் நல் சிந்தனை நற்செயலில் கவனம் செலுத்தி பயிற்சி எடுங்கள்.. அந்த பயற்சி உங்களுக்கு உடல் மன ஆரோக்கியத்தை கொடுக்கும்.

-ரியாஸ்

Tags:    

Similar News