கதம்பம்

பூமியுடன் தொடர்பில் இருங்கள்...

Published On 2023-06-20 15:34 IST   |   Update On 2023-06-20 15:34:00 IST
  • உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பராமரிக்கப்படுகிறது.
  • வெறும் கால்களுடன் நடப்பதன் மூலம் மன அழுத்தம், உடல்வலி, தூக்கமின்மை, உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம்.. அதாவது வெறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம்? பதில் முக்கால்வாசி இல்லை என்பதே.

வெறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லியே காலணிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலனியை விட ஷூ அணிவதை மார்டனாகவும், பெருமிதமாகவும் கொள்கிறோம்.

மனிதன் காலணி அணியாமல் வெறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்படும் மாற்றம் பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஒரு சுகாதார நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பார்ப்போம்..

ஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வேறும் கால்களுடன் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்:-

புவி இயற்கையாகவே நெகடிவ் சார்ஜ் (-) கொண்டது மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் கொண்டது. எனவே வெறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது.

அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து வைட்டமின்- சி கிடைக்கிறது.

உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பராமரிக்கப்படுகிறது.

எலும்பு, கல்லிரல், மூளை (பார்கின்சன்) போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

மற்றும் வெறும் கால்களுடன் நடப்பதன் மூலம் மன அழுத்தம், உடல்வலி, தூக்கமின்மை, உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

தொடர்ந்து ஒருமணிநேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்தஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் சீராக பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது. மிக முக்கியமாக இரத்த பாகுத்தன்மை குறைக்கப்படுகிறது. இதனால் இதயநோய்கள் முற்றிலும் குறைக்கபடுகிறது. எனவே இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

-பாலா

Tags:    

Similar News