செய்திகள்
கோப்புப்படம்

நிரவ் மோடி கூறியதாக வைரலாகும் பகீர் தகவல்

Published On 2021-11-17 05:23 GMT   |   Update On 2021-11-17 05:23 GMT
வைர வியாபாரி நிரவ் மோடி காங்கிரஸ் கட்சிக்கு கமிஷன் கொடுத்ததாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
 

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வற்புறுத்தியதால் தான் நாட்டை விட்டு ஓடியதாக லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு நிரவ் மோடி ரூ. 456 கோடி கமிஷனாக வழங்கியதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததார் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், நிரவ் மோடி கூறியதாக வலம்வரும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. முன்னதாக நிரவ் மோடி ஊழலில் பா.ஜ.க. கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக கூறும் தகவலும் சமூக வலைதளங்களில் வைரலானது.



பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் சிக்கிய நிரவ் மோடி 2018 ஜனவரி மாத வாக்கில் நாட்டை விட்டு தப்பி சென்றார். பின் மார்ச் 16, 2019 ஆம் ஆண்டு இவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். இவரது கைதை தொடர்ந்து இவர் கூறியதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் நிரவ் மோடி காங்கிரஸ் கட்சிக்கு கமிஷன் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார் என கூறி வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
Tags:    

Similar News