செய்திகள்
வைரல் புகைப்படம்

பாகிஸ்தான் ஏற்பாடு செய்த பாதுகாப்பு என கூறி வைரலாகும் புகைப்படம்

Published On 2021-09-27 05:04 GMT   |   Update On 2021-09-27 05:04 GMT
பாகிஸ்தான் அரசு சார்பில் நியூசிலாந்து அணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு இது என கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


பாகிஸ்தானில் சுற்று பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிகெட் அணி பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி செப்டம்பர் 17 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனான கிரிகெட் தொடரில் விளையாட மறுத்து நாடு திரும்பியது. இதற்கு பாகிஸ்தான் கிரிகெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா நியூசிலாந்து அணியின் நடவடிக்கையை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது இலங்கை கிரிகெட் அணிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கொடுத்த பாதுகாப்பு எனும் தலைப்பில் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. 



வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2019 வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது. உண்மையில் இந்த புகைப்படம் இலங்கை கிரிகெட் அணிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு நடவடிக்கை என்றும் தெரியவந்துள்ளது. இதே புகைப்படம் அடங்கிய செய்தி குறிப்புகள் செப்டம்பர் 30, 2019 அன்று பதிவிடப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில், இலங்கை அணிக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு என கூறி வைரலாகும் புகைப்படம் தற்போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது ஆகும்.
Tags:    

Similar News