செய்திகள்

தி.மு.க. நிலைப்பாட்டை பொறுத்து காங்கிரசின் முடிவு இருக்கும்- கே.எஸ். அழகிரி பேட்டி

Published On 2019-06-22 12:25 IST   |   Update On 2019-06-22 12:25:00 IST
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டி என்ற நிலைப்பாடு எடுத்தால், அதைப் பொறுத்து நாங்கள் முடிவு செய்வோம் என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

சென்னை:

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும், காங்கிரசுக்கு எத்தனை காலம்தான் பல்லக்கு தூக்குவது என தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு பேசிய இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கே.என்.நேருவின் பேச்சு குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் தற்போது சாலை பயணத்தில் இருக்கிறேன். கே.என்.நேரு என்ன பேசினார் என்ற முழு விவரம் எனக்கு தெரியாது. விவரம் தெரியாமல் அதைப் பற்றி பேசக் கூடாது.


ஒருவேளை தி.மு.க. தனித்து போட்டி என்ற நிலைப்பாடு எடுத்தால், அதைப் பொறுத்து நாங்கள் முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News