செய்திகள்

பாப்பிரெட்டிபட்டி, பூந்தமல்லி, கடலூர் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் கமி‌ஷனர் பரிந்துரை

Published On 2019-04-21 08:25 GMT   |   Update On 2019-04-21 08:25 GMT
பாப்பிரெட்டிபட்டி, பூந்தமல்லி, கடலூர் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமி‌ஷனர் பரிந்துரை செய்துள்ளார். #Electioncommissioner

சென்னை:

தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி உள்பட 8 வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட வந்தவர்களுக்கு கைவிரலில் ‘மை’ வைத்த பிறகு ஓட்டு போட விடாமல் விரட்டி விட்டு அங்குள்ளவர்களே கள்ள ஓட்டு போட்டனர். இது தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் சமூக வலை தளங்களில் வெளி வந்தது.

இதேபோல் பூந்தமல்லி தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியிலும், கடலூரில் ஒரு வாக்கு சாவடியிலும் கள்ள ஓட்டு போட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், பொது பார்வையாளர்களும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நேற்று அறிக்கை அனுப்பி இருந்தனர்.


இந்த 10 தொகுதிகளிலும் முறைகேடு நடந்துள்ளதால் மறு வாக்குபதிவு நடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த அறிக்கையை ஆதாரமாக வைத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மத்திய தேர்தல் கமி‌ஷனுக்கு இன்று பரிந்துரை செய்துள்ளார். அதில் 10 தொகுதியிலும் மறு வாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தி உள்ளார்.

இதன்படி நாளை அல்லது நாளை மறுநாள் இந்த 10 வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என எதிபார்க்கப்படுகிறது. #Electioncommissioner

Tags:    

Similar News