செய்திகள்

நான் பிராமணன் என்பதால் காவலாளி ஆக முடியாது - சுப்பிரமணிய சாமி சர்ச்சை பேச்சு

Published On 2019-03-25 06:31 GMT   |   Update On 2019-03-25 06:31 GMT
நான் பிராமணன் என்பதால் காவலாளி ஆக முடியாது என்று சுப்பிரமணிய சாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #SubramanianSwamy #BJP

சென்னை:

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டின் காவலாளிகள் என பிரதமர் மோடி தெரிவித்தார். இதையடுத்து நானும் காவலாளி தான் என்ற ஒரு பிரசாரத்தை பா.ஜ.க.வினர் தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் டுவிட்டரில் சவுக்கிதார் (காவலாளி) நரேந்திர மோடி என பெயரை மாற்றி உள்ளார். அமித்ஷா, அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் தங்களது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என மாற்றி உள்ளனர்.

இந்த நிலையில் ஒரு தனியார் டி.வி.க்கு பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சவுக்கிதார் என்ற பெயர் மாற்றத்தை கட்சியினர் செய்து வர நீங்கள் மட்டும் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு சுப்பிரமணியசாமி சர்ச்சையான பதிலை அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் காவலாளி ஆக முடியாது. பிராமணர்கள் காவலாளிகளாக முடியாது.

இதுதான் உண்மை. நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே காவலாளிகளின் பணியாகும். இதைதான் சவுக்கிதார்களிடம் எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அதனால் நான் காவலாளியாக முடியாது.

இவ்வாறு அவர் சர்ச்சையாக கூறியுள்ளார். #SubramanianSwamy #BJP

Tags:    

Similar News