செய்திகள்

ஆப்பக்கூடல் அருகே வாழைக்காய் வியாபாரியிடம் ரூ. 1½ லட்சம் பறிமுதல்

Published On 2019-03-22 09:36 GMT   |   Update On 2019-03-22 09:36 GMT
ஆப்பக்கூடல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வாழைக்காய் வியாபாரியிடம் ரூ. 1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

ஆப்பக்கூடல்:

கேரள மாநிலம் குட்டி சிறா என்ற பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதிக்கு புஜூ என்பவர் வாழைக்காய் லோடு ஏற்றிக் கொண்டு ஈச்சேரில் வந்து கொண்டிருந்தார்.

ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி கை காட்டி பிரிவில் வந்த போது அங்கு தேர்தல் பறக்கும் படையினர் ஜெயக்குமார் என்பவர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஈச்சேர் மினி லாரியை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர் அப்போது ரூ.1½ லட்சம் கொண்டு வரப்பட்டதையும் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதே போல் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் நால் ரோடு பஸ் நிறுத்தம் முன் தேர்தல் பறக்கும் படையினர்(பெருந்துறை சட்டமன்ற தொகுதி) அதிகாரி மோகன சுந்தரம் தலைமையில் கொடுமுடி சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர் அதில் அந்தியூர் அருகே உள்ள ஆலமரத்து காடு பகுதியை சேர்ந்த செந்தில் குமார் (48) என்பவர் கன்னிவாடி சந்தைக்கு ஆடு வாங்க ரூ. 87050-ஐ எடுத்து கொண்டு சென்றார்.

ஆனால் அந்த பணத்துக்கு ஆவணம் இல்லாததால் அதை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் பிறகு அதை பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls

Tags:    

Similar News