செய்திகள்

தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ.13.90 கோடி பறிமுதல்- தலைமை தேர்தல் அதிகாரி

Published On 2019-03-21 07:28 GMT   |   Update On 2019-03-21 08:02 GMT
தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், இதுவரை 13.90 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #LSPolls #FlyingSquads
சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களவைத் தேர்தலுக்காக இதுவரை 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலுக்கு 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 2 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள தொகுதிகளுக்கு மட்டும் தலா 3 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படையால் இதுவரை 13.90 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உரிமம் பெற்றுள்ள 21999 துப்பாக்கிகளில் 18 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 32 துப்பாக்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #FlyingSquads
Tags:    

Similar News