உள்ளூர் செய்திகள்
பள்ளப்பட்டியில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
- சேலம் பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனி ஆதிசக்திபுரம் பகுதியை சேர்ந்தவர் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வீட்டில் மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
- இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனி ஆதிசக்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மணிகண்டன் (வயது 37). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வீட்டில் மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.