உள்ளூர் செய்திகள்

பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Published On 2023-03-13 15:32 IST   |   Update On 2023-03-13 15:32:00 IST
  • இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் அகிலா அவருடன் பேச மறுத்துள்ளார்.
  • விவேக் நேற்று அகிலாவின் வீட்டிற்கு சென்று அகிலாவுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அலிஸ் அகமது. இவரது மனைவி மாலிகா. இவரது மகள் அகிலா (வயது22). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அப்போது இவருடன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த விவேக் (29) வாலிபர் பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் அகிலா அவருடன் பேச மறுத்துள்ளார்.

இதனால் விவேக் நேற்று அகிலாவின் வீட்டிற்கு சென்று அகிலாவுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தியுள்ளார். கழுத்து முகம் உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து பட்ட அகிலாவை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் அகிலா கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விவேக்கை கைது செய்தனர்.

Tags:    

Similar News