உள்ளூர் செய்திகள்
பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
- பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி பிரச்சனை செய்த அகிலனை போலீசார் கைது செய்தனர்.
- இவர் மீது 10 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பெங்களூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது அங்கு வந்த பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி பிரச்சனை செய்த பர்கூர் அருகே உள்ள அம்பேத்கர் காலனி யை சேர்ந்த அகிலன் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எற்கனவே இவர் மீது 10 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.