உள்ளூர் செய்திகள்

உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது

Published On 2023-08-03 15:22 IST   |   Update On 2023-08-03 15:22:00 IST
  • மர்ம நபர் ஒருவர் உண்டியலை உடைத்து கொண்டிருந்தார்.
  • ஊர்மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து தொப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள சாமியார் கொட்டாய் பகுதியில் சிவன்கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் உண்டியலை உடைத்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த ஒருவர் ஊர்மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வருவதற்குள் அங்கிருந்து அந்த கொள்ளையன் தப்பி சென்று விட்டார். பின்னர் ஊரை சுற்றி தேடி பார்த்தனர். அப்போது உண்டியலில் திருடிய பணத்தை எண்ணி கொண்டிருந்த போது அந்த நபரை ஊர்மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து தொப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மருளுகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த முருகன் மகன் சஞ்சய் (வயது19) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News