உள்ளூர் செய்திகள்

புகார் அளிக்க மகள்களுடன் வந்த மூதாட்டி.

திண்டுக்கல்லில் சொத்துக்காக தாய், சகோதரிகளை மிரட்டும் வாலிபர்

Published On 2023-09-04 12:53 IST   |   Update On 2023-09-04 12:53:00 IST
  • பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி தனது 5 சகோதரிகள் மற்றும் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
  • இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது 5 மகளுடன் சுப்பம்மாள் புகார் அளித்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மனைவி சுப்பம்மாள் (65). இவர்களுக்கு 5 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது மகன்களில் ஒருவரான ரெங்கராஜ், சந்தைப்பேட்டையில் உள்ள பத்தாயிரம் சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து, பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி தனது 5 சகோதரிகள் மற்றும் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

கடந்த வாரம் வீட்டில் தனியாக இருந்த தாய் சுப்பம்மாளை, ரங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் செருப்பு மற்றும் கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக போலீசிலும் புகார் அளித்துள்ளார் .

இதனை அடுத்து இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது 5 மகளுடன் சுப்பம்மாள் புகார் அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

மகன் ரங்கராஜ், மருமகள் பாப்பாத்தி, பேரன் ராம்குமார் ஆகியோர் சொத்தை அபகரித்துக் கொண்டு கையெழுத்து போட வலியுறுத்தி கொடுமைப்படுத்தி வருகின்றனர். மேலும் எனது கணவர் சிவபெருமாளை மதுவுக்கு அடிமையாக்கி தன் வீட்டோடு அடைத்து வைத்துள்ளனர். எனவே நடவடிக்கை எடுத்து கணவரை மீட்டுத் தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News