உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
கம்பம் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
- கேரளாவிற்கு ஏலத்தோட்ட தொழிலா ளர்களை ஜீப்பில் அழை த்துச் செல்லும் வேலை பார்த்து வருகிறார்.
- சம்பவத்தன்று தனது வாகனத்தில் ஆட்களை இறக்கிவிட்டு கம்பம் மெட்டு மலைச்சாலையில் வந்தபோது கேரளா மாநிலம் நெடுங்கண்டத்தை சேர்ந்த 4 பேர் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வாக னத்தை பின் தொடர்ந்து வந்தனர்.
கம்பம்:
கம்பம் அருகில் உள்ள காமயக்கவுண்டன் பட்டி யை சேர்ந்தவர் ஜெயராஜ் (54). இவர் கேரளாவிற்கு ஏலத்தோட்ட தொழிலா ளர்களை ஜீப்பில் அழை த்துச் செல்லும் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று தனது வாகனத்தில் ஆட்களை இறக்கிவிட்டு கம்பம் மெட்டு மலைச்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது கேரளா மாநிலம் நெடுங்கண்டத்தை சேர்ந்த பிரபு (29), ஜெயபால் (29), ெஜயபாண்டி (22), மகேஷ் (24) ஆகிய 4 ேபரும் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வாக னத்தை பின் தொடர்ந்து வந்தனர்.
அவர்கள் ஜெயராஜின் வாகனத்தை இடிக்கும் வகையில் ஆபத்தான முறையில் பயணித்ததால் இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.