உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் குழந்தையுடன் மாயம்

Published On 2023-09-08 15:34 IST   |   Update On 2023-09-08 15:34:00 IST
  • வீட்டை சரியாக பராமரிக்காமல் இருந்ததால் கணவர் ஆனந்தராஜ், சூர்யாவை திட்டியதாக தெரிகிறது.
  • 4-ந் தேதி தனது மகள் பிரதிக்‌ஷாவை அழைத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார்.

தருமபுரி,  

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாதேரிகாட்டு கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். கூலித்தொழி–லாளியான இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சூர்யா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரதிக்ஷா (5), எக்ஷி (3) என்ற 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சூர்யா வீட்டை சரியாக பராமரிக்கா–மல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது கணவர் ஆனந்தராஜ், சூர்யாவை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட சூர்யா கடந்த 4-ந் தேதி தனது மகள் பிரதிக்ஷாவை அழைத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். அப்போது அவர் தனது தாயின் வாட்ஸ்அப்பிற்கு தான் வீட்டை விட்டு செல்வதாகவும், தனது மற்றொரு மகள் எக்ஷியை வீட்டிலேயே இருப்பதாகவும் குறுந்தகவலை அனுப்பி யுள்ளார். இதனால் பதறிப்போன சூர்யாவின் தாயார் உடனே ஆனந்த ராஜூக்கு தகவல் தெரி வித்தார். இருவரும் சூர்யா வையும், பிரதிக்ஷாவை தேடிவந்தனர். எங்கு தேடி யும் 2 பேரும் கிடைக்காததால் அவர்கள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து ஆனந்தராஜ் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் போலீசார் மாயமான தாய் சூர்யாவை, அவரது மகள் பிரதிக்ஷாவையும் தீவிர மாக தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News