உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் கோர்ட்டு வளாகத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி

Published On 2022-08-08 13:55 IST   |   Update On 2022-08-08 13:55:00 IST
  • இளம்பெண்ணுக்கும் வாலிபருக்கும் கடந்த 4 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
  • கருத்து வேறுபாட்டால் இளம்பெண் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் எம்.ஜி.எம். நகரைச் சேர்ந்த 35 வயதான இளம்பெண்ணுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 4 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் இளம்பெண் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று வழக்கு விசாரணைக்காக இளம்பெண் கோர்ட்டுக்கு வந்த போது திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News