உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கள்ளக்காதலிக்காக தீக்குளித்த வாலிபர் பலி

Published On 2022-06-18 13:08 IST   |   Update On 2022-06-18 13:08:00 IST
  • திண்டுக்கல் அருகே கள்ளக்காதலிக்காக தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
  • கள்ளக்காதலிக்காக உயிர் விட்ட வாலிபர்

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை வாடிப்பட்டி காலனியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது30). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கணவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த சந்துரு (23) என்பவருக்கும் கள்ள த்தொடர்பு ஏற்பட்டது. புவனேஸ்வரிக்கு, சந்துரு பணம் கொடுத்துள்ளார். இதனிைடயே திடீரென சந்துருவுடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்துரு கடந்த 13-ந் தேதி இரவு புவனேஸ்வரி வீட்டுக்கு வந்தார். அவருடன் தகராறில் ஈடுபட்ட நிலையில் திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றி அவரையும் அணைத்துக் கொண்டார்.

இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பலத்த காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்துரு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன்ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News