உள்ளூர் செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட ராஜா.
வேடசந்தூர்அருகே வயிற்றுவலியால் வாலிபர் தற்கொலை
- பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
- மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே மல்வார்பட்டியை சேர்ந்த வர் ராஜா(29). சென்டிரிங் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ராஜா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேட சந்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.