உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கம்பத்தில் தம்பதியை தாக்கி மிரட்டிய வாலிபர் கைது

Published On 2022-12-14 10:18 IST   |   Update On 2022-12-14 10:18:00 IST
  • தம்பதியை தாக்கி மிரட்டிய வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
  • புகாரின் பேரில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கம்பம்:

கம்பம் அருகே உள்ள 11-வது வார்டு உதயம் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 35). இவரது மனைவி நித்யா (28). இவர்கள் கேரளாவில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். அவ்வப்போது தங்கள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

அந்த சமயங்களில் தாத்தப்பன் குளத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஹரிஹரன் (23) என்பவர் நித்யாவிடம் தவறான முறையில் பேசி வந்துள்ளார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே அவர்கள் ஹரிஹரனை எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் நித்யாவிடம் ஹரிஹரன் தவறான முறையில் பேசினார். இதனை தட்டிக் கேட்ட அவரது கணவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.

மேலும் பீர் பாட்டிலை உடைத்து அவர்களை குத்த வந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே போலீசார் ஹரிஹரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News