உள்ளூர் செய்திகள்

 பள்ளியில் நடந்த யோகா பயிற்சியில் மாணவர்கள்.

வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்

Published On 2022-06-22 09:15 GMT   |   Update On 2022-06-22 09:15 GMT
  • 3-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றியமையாமை குறித்து விளக்கமளித்தனர்.
  • ஆசனப் பயிற்சிகள் மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தி உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எலிசபெத் தலைமை தாங்கினார்.

10-ம் வகுப்பு மாணவர்கள் 3-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றியமையாமை குறித்து விளக்கமளித்து பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர்.

மாணவர்களும் மிகவும் உற்சாகத்துடன் இப்பயிற்சிகளை செய்தனர். சூர்ய நமஸ்காரம், விருட்சாசனம்ரூபவ், வஜ்ராசனமரூபவ், வீரபத்ராசனமரூபவ், உஸ்தாசனமரூபவ், யோகமுத்ரா போன்ற ஆசனப் பயிற்சிகள் மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தி உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது.

இறுதியில் யோகாசன பயிற்சியாளர் யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

Tags:    

Similar News