உள்ளூர் செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் குறித்து அவதூறு- தனியார் டிரஸ்ட் நிர்வாகிகளிடம் விசாரணை

Published On 2022-12-31 14:42 IST   |   Update On 2022-12-31 14:42:00 IST
  • மதுரையை சேர்ந்த காவேரி சேவா டிரஸ்ட் என்ற அமைப்பு கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலின்றி தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது.
  • இன்ஸ்பெக்டர் ராதிகா தனியார் டிரஸ்ட்டை சேர்ந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

மதுரை:

மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் அமைப்பு யூ-டியூப், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விரும்பும் பக்தர்கள் ரூ. 1000 செலுத்தினால் ஆண்டுதோறும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தவறான தகவல்களை பரப்பியது தொடர்பாக கோவில் மேற்பார்வையாளர் ஆறுமுகம் போலீசில் புகார் செய்தார். அதில், மதுரையை சேர்ந்த காவேரி சேவா டிரஸ்ட் என்ற அமைப்பு கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலின்றி தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி தலைமையில் இன்ஸ்பெக்டர் ராதிகா தனியார் டிரஸ்ட்டை சேர்ந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News