உள்ளூர் செய்திகள்

பூதலூர் மனையேரிப்பட்டியில் உலக மண்வள நாள் விழா நடைபெற்றது.

வேளாண் பல்கலைகழகம் சார்பில் தஞ்சை பூதலூரில் உலக மண்வள நாள் விழா

Published On 2022-12-08 09:22 GMT   |   Update On 2022-12-08 09:22 GMT
  • வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம்மூலம் உலக மண்வள நாள் விழா பூதலூர் மனையேரிப்ப ட்டியில் நடைபெற்றது.
  • விழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது சந்தே கங்களை கேட்டு பயன் அடைந்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர், காட்டு தோட்டம், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நீர் நுட்ப மையம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் மூலம் உலக மண்வள நாள் விழா பூதலூர் மனையேரிப்பட்டியில் நடைபெற்றது.

இதில் இளநிலை ஆராய்ச்சியாளர் சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு தஞ்சாவூர் காட்டுதோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராமநாதன் தலைமை தாங்கி, இந்தத் திட்டத்தை பற்றியும், உலக மண்வள நாள் விழா பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

இத்திட்டத்தின் பொறுப்பாளர் பார்த்திபன் மண் மாதிரிகள் எடுத்தல், மண் பரிசோதனையின் அவசியம் மற்றும் கடலை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு ஈடுபொருட்களாக உயிர் உரம் வழங்கப்பட்டது.இந்த விழாவிற்கான ஏற்பாட்டை இளநிலை ஆராய்ச்சியாளர் சதீஷ்குமார், தொழில்நுட்ப உதவியாளர் ஆனந்தராஜ், சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர்.

விழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது சந்தே கங்களை கேட்டு பயன் அடைந்தனர். முடிவில் தொழில் நுட்ப உதவியாளர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News