உள்ளூர் செய்திகள்
திருத்துறைப்பூண்டியில் செயற்குழு கூட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டியில், ரெயில் பயணத்தை ஊக்குவிக்க செயற்குழு கூட்டம்
- கூட்டமானது திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் ரெயிலில் நடத்தப்பட்டது.
- ரெயில்வே ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கி, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகர புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் ரெயிலில் பொதுமக்கள் அனைவரும் சென்று பயன்பெறவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சங்க கூட்டமானது திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் ரெயிலில் நடத்தப்பட்டது.
மேலும் ரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சங்கத்தின் சார்பாக இனிப்புகள் வழங்கி அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் புகைப்பட கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் சசிசுந்தர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.