உள்ளூர் செய்திகள்

வெளி மாநிலத் தொழிலாளர்கள், குடும்ப அட்டை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்

Published On 2023-09-29 15:03 IST   |   Update On 2023-09-29 15:03:00 IST
  • e-Shram என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்
  • பொது விநியோக திட்ட அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன்பெறலாம்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நிரந்தரமாக புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்களில் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு e-Shram என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்த வெளி மாநிலத்தவர்கள் தங்கள் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல்அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் அம்மனுவின் மீது விசாரணை செய்து மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படும். உரிய விசாரனைக்கு பின் தகுதியுள்ள நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டவுடன் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பொதுவிநியோ கதிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன்பெறலாம்.

எனவே வெளி மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும், இதுவரை குடும்ப அட்டை இல்லாதவர்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி e-Shram என்ற இணையதனத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Similar News