குடிபோதை தகராறில் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை
- மதுபோதையில் இருந்த மோகன், வெங்கடேசனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
- சிகிச்சை பலனின்றி இன்றுகாலை வெங்கடேஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அடகிசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது36). அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் ஆகிய இவர்கள் இருவரும் நேற்று மது அருந்த இருசக்கர வாகனத்தில் காமையூர் அருகே சென்றனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் நின்று மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களது உறவினர்களான நாகேஷ், மோகன், திம்மராயன் ஆகியோரும் அங்கு வந்தனர். இதனால் அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து மதுபோதையில் இருந்த மோகன், வெங்கடேசனை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனை பார்த்த நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுகாலை வெங்கடேஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரணி, கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கொலை நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இது ெதாடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.