உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளம் அருகே மினிவேன் மோதி தொழிலாளி பலி -நண்பர்கள் 2 பேருக்கு தீவிர சிகிக்சை

Published On 2022-09-15 14:48 IST   |   Update On 2022-09-15 14:48:00 IST
  • சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் கமல் (வயது35).
  • ஆனந்தபுரம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஒரு மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் கமல் (வயது35).

மினிலாரி மோதி விபத்து

இவரது நண்பர் தெற்கு புளியங்குளத்தை சேர்ந்த விஜயகுமார் (21). இவர்கள் இருவரும் சென்னையில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களது மற்றொரு நண்பரான வாசுதேவன் என்பவரது அண்ணன் திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தனர்.

தொழிலாளி பலி

நேற்று திருமணத்தில் கலந்து கொண்டு மாலையில் நண்பர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கருவேலங்காட்டில் இருந்து சாத்தான்குளத்திற்கு சென்றனர்.

ஆனந்தபுரம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஒரு மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நண்பர்கள் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் கமல் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News