உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி தொழிலாளி சாவு

Published On 2023-10-04 15:50 IST   |   Update On 2023-10-04 15:50:00 IST
  • நல்லம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மோதி உடல் நசுங்கி தொழிலாளி உயிரிழந்தார்
  • 100 அடி தூரம் உடலை இழுத்து சென்றது

தருமபுரி மாவட்டம், தடங்கம் ஊராட்சி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்த வர் பாலகிருஷ்ணன் (வயது 36).

இவர் தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கெங்கலாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தபட்டிருந்த லாரியை ஒதுங்க முற்பட்டுள்ளார்.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது.இதனால் தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் சாலையின் வலது புறம் சென்று கொண்டிருந்த கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விபத்துக்குள்ளாகி லாரியின் சக்கரத்தில் சிக்கியது தெரியாத லாரியின் ஓட்டுநர் தொடர்ந்து வாகனத்தை இயக்கியுள்ளார். இதனால் சுமார் 100 அடி தூரம் வரை பாலகிருஷ்ணன் உடல் நசுங்கியவாறு லாரி இழுத்துச் சென்றுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவல் துறையினர் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கிய பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பைக் மீது மோதிய கார் மற்றும் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தபட்டிருந்த லாரியின் ஓட்டுநர் குறித்து தொப்பூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News