உள்ளூர் செய்திகள்

சென்னையில் கோவில் குளம் தூர்வாரும் பணியின்போது தொழிலாளி உயிரிழப்பு

Update: 2023-01-28 14:16 GMT
  • தூர்வாரும் பணியின்போது தொழிலாளி நாராயணன் என்பவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
  • 1 மணிநேரம் போராடி சேற்றில் சிக்கிய உடலை மீட்டனர்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் கோயில் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இருவர் ஈடுபட்டு வந்தனர். பணி நடந்து கொண்டிருக்கும் போது நாராயணன் என்பவர் குளத்தில் முழ்கியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக வண்ணாராப்பேட்டை தீயணைப்பு துறை மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து குளத்தினுள் இறங்கி நாராயணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 1 மணி நேரம் போராடி சேற்றினுள் சிக்கிய நாராயணின் உடலை மீட்டனர். கோயில் குளத்தை சுத்தப்படுத்த சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாராயணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News