மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து-தொழிலாளி சாவு
- சின்னகொத்தூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக வண்டி நிலைதடுமாறி முன்னாள் சென்ற மாட்டுவண்டியின் மீது மோதியது.
- பலத்த காயமடைந்த மண்டப்பா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே தேவர்குந்தானி பகுதியைச் சேர்ந்தவர் மண்டப்பா (வயது45).
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் (36), கரியசத்திரம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரமேஷ் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு தங்கடிகுப்பம் அருகே வந்தனர்.
அப்போது அவர்கள் கோத்தகிருஷ்ண–பள்ளி-சின்னகொத்தூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக வண்டி நிலைதடுமாறி முன்னாள் சென்ற மாட்டுவண்டியின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மண்டப்பா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற ரமேஷ், கன்னியப்பன் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வேப்பனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.