உள்ளூர் செய்திகள்

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி தொழிலாளி சாவு

Published On 2023-07-20 15:10 IST   |   Update On 2023-07-20 15:10:00 IST
  • காரிமங்கலம் அருகே மொரப்பூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
  • மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியது.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள சப்பாணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முகமது பயாஸ் (வயது45). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் காரிமங்கலம் அருகே மொரப்பூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முகமது பயாஸ் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News