உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
- பழனி உத்திரமேரூர் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார்.
- மோட்டார் சைக்கிளில் நெல்வாய் நோக்கி சென்று கொண்டிருந்தார் சிறுங்கோழி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 55). உத்திரமேரூர் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 11.7.2023 அன்று உத்திரமேரூரில் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நெல்வாய் நோக்கி சென்று கொண்டிருந்தார் சிறுங்கோழி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.