உள்ளூர் செய்திகள்

டவுனில் 5-வது மையம் திறக்கப்பட்டு ஆதார் இணைப்பு பணி நடைபெற்ற போது எடுத்த படம்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி: டவுனில் 5-வது மையம் திறப்பு

Published On 2022-12-12 09:41 GMT   |   Update On 2022-12-12 09:41 GMT
  • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28- ந்தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது
  • ஏற்கனவே 4 மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28- ந்தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநகர பகுதியில் ஏற்கனவே 4 மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது கூடுதலாக ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5-வது சிறப்பு முகாம் டவுன் பிரிவுக்கு உட்பட்ட நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் கீழ ரதவீதியில் அம்மன் சன்னதி அருகில் இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

இதில் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை திறந்து வைத்து மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கி வைத்தார். செயற்பொறியாளர் (நகர்ப்புற கோட்டம்) முத்துக்குட்டி. உதவி செயற்பொறியாளர் சங்கர், செயற்பொறியாளர்( டவுண்) ராஜகோபால் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News