உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் உரிமை திட்ட முன்னோட்ட முகாமினை விழுப்புரம் கலெக்டர் பழனி ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

விக்கிரவாண்டியில் மகளிர் உரிமை திட்ட முன்னோட்ட பதிவு முகாம்:விழுப்புரம் கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2023-07-23 12:54 IST   |   Update On 2023-07-23 12:54:00 IST
  • ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை 79 ரேஷன் கடைகளுக்கு 137 மையங்களில் பதிவு நடை பெறுகிறது
  • மின் வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி தாலுகாவில் மகளிர் உரிமைத் திட்ட உதவி பெற முதற்கட்டமாக வரும் நாளை முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை 83 ரேஷன் கடைகளுக்கு 87 மையங்களிலும், 2-ம் கட்டமாக வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை 79 ரேஷன் கடைகளுக்கு 137 மையங்க ளில் பதிவு நடை பெறுகிறது.இதனை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்பாக விக்கிரவாண்டி, பாப்பனாப் பட்டு, சாமியாடி குச்சி பாளையம் உள்ளிட்ட சில மையங்களில் முன்னோட்ட பதிவு துவங்கியது.

அதை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் சென்று ஆய்வு செய்தார். பதிவு மையங்களில் மின் வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.  பயனாளிகளிடம் வங்கி கணக்குகள் நடைமுறையில் உள்ளதா எனவும், சர்வர் வேலை செய்கிறதா எனவும், தினமும் டோக்கன் படி பதிவு செய்ய ஆலோசனை களை வழங்கினார். அப்போது தாசில்தார் ஆதி சக்தி சிவக்குமரி மன்னன், செயல் அலுவலர் அண்ணா துரை, தேர்தல் துணை தாசில்தார் ஜோதிப்பிரியா, வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், மெகருனிஷா, ஒருங்கிணைப்பாளர்கள் தமிழழகன், கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News