திருவள்ளூரில் ஆசிரியை உள்பட 2 பேரிடம் நகை பறிப்பு: மர்ம நபர்கள் துணிகரம்
- நேற்று மாலை விஜயலட்சுமி பள்ளி முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
- மகன், மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று இருளஞ்சேரியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது மனைவி விஜயலட்சுமி (42). இவர் பூண்டி அடுத்த வெள்ளத்துக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் பள்ளிக்கு தினமும் மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை விஜயலட்சுமி பள்ளி முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
புதூர் அருகே திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
பேரம்பாக்கம் அடுத்த சத்தரை, சாய் ரித்விக் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி பூங்கோதை (34). இவர் தனது மகன், மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று இருளஞ்சேரியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
பேரம்பாக்கம் சத்தரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பூங்கோதை கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்து தப்பினர். இதுகுறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.