உள்ளூர் செய்திகள்

பெண்ணின் காதுகளை அறுத்து தோடுகள் திருடப்பட்ட சம்பவம்:கோவில் பூசாரி கைது

Published On 2022-12-30 09:49 GMT   |   Update On 2022-12-30 09:49 GMT
  • லட்சுமியின் 2 காதுகளும் அறுக்கப்பட்டு அவற்றில் இருந்த தங்க தோடுகளை பறித்துச் சென்றது தெரியவந்தது.
  • இறந்து விட்டதாக நினைத்து காதுகளை அறுத்து தோடுகளை திருடி சென்றதாகவும் கூறினார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி கங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 52).

இவர் கடந்த 27-ந்தேதி அதிகாலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் அதே பகுதியில் உள்ள வயல்வெளி அருகே ரத்தக்காயங்களுடன் ஜெயலட்சுமி மயங்கி விழுந்து கிடந்தார்.

அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஜெயலட்சுமியின் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இந்த குறித்து பஞ்ச பள்ளி போலீசில் புகார் தரப்பட்டது. ஜெய லட்சுமியின் 2 காதுகளும் அறுக்கப்பட்டு அவற்றில் இருந்த தங்க தோடுகளை பறித்துச் சென்றது தெரியவந்தது.தற்போது கோமா நிலையில் ஜெயலட்சுமி சிகிச்சை பற்று வருகிறார்.

இந்நிலையில் அவரை தாக்கி தோடுகளை பறித்தது பஞ்சப்பள்ளி அருகேயுள்ள கூத்தடிப்பட்டியை சேர்ந்த கோவில் பூசாரி மாதன் (64) என்பது தெரிய வந்தது.

அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது ஜெயலட்சுமியின் கணவர் இறந்துவிட்ட பிறகு மாதனுடன் கள்ள தொடர்பில் இருந்ததா கவும், சமீபத்தில் வேறு இருவருடனும் ஜெயல ட்சுமி தொடர்பு வைத்து க்கொண்டதால் ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் மாதன் தெரிவித்தார்.

இரும்பு கம்பியால் ஜெயலட்சுமியை தாக்கியபோது அவர் மயங்கி விழுந்ததால் இறந்து விட்டதாக நினைத்து காதுகளை அறுத்து தோடுகளை திருடி சென்றதாகவும் கூறினார். இதையடுத்து மாதனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News