உள்ளூர் செய்திகள்

நிச்சயிக்கப்பட்ட பெண் சாவு: வாலிபருக்கு தண்டனை பெற்று தர கோரி விவசாயி மனு

Published On 2022-07-26 14:13 IST   |   Update On 2022-07-26 14:13:00 IST
  • நிச்சயிக்கப்பட்ட பெண் சாவிற்கு காரணமான வாலிபருக்கு தண்டனை பெற்று தர கோரி விவசாயி மனு அளித்தார்.
  • ரம்யா கிருஷ்ணனை ஸ்ரீதர் என்பவர் கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

கடலூர்:

கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி பெத்தநாயக்கன்குப்பம் சேர்ந்தவர் மதியழகன். இவர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மகள் ரம்யா கிருஷ்ணன். பிஎஸ்சி பட்டதாரி. கடந்த ஜூன் மாதம் 10 ந்தேதி தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. கடந்த மே மாதம் 25-ந் தேதி தேதி திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக குறிஞ்சிப்பாடி சென்று வருவதாக கூறி சென்றார். அப்போது எனது மகள் ரம்யா கிருஷ்ணனை ஸ்ரீதர் என்பவர் கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதற்கு என் மகள் மறுத்ததால் சுத்தியலால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த எனது மகள் கதறி துடித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் எனது மகள் ரம்யா கிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் . இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று எனது மகள் ரம்யா கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். நான் விவசாயக் கூலி செய்து வருகிறேன்‌. ஆகையால் மகளை இழந்து வாடும் எங்களுக்கு நிவாரணமாக எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News