கிருஷ்ணகிரியில் பெண் கொலை:டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை
- நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை ஒன்று மாயமாகி உள்ளது.
- கருப்பு துணி ஒன்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள தொன்னையன் கொட்டாய் பகுதியில் குடியிருந்து வந்தவர் ராஜா. இவரது மனைவி சரஸ்வதி (வயது51). இவரது கணவர் ராஜா 9 வருடத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. சரஸ்வதி அந்த பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். புதிய வீடு ஒன்றும் கட்டி வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கு சொந்தமான கிருஷ்ணகிரி பழையபேட்டையில் இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தை ரூ.36 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தை வாங்கி உள்ளார். நேற்று முன்தினம் அந்த பணத்தை வாங்கி கொண்டு வீட்டில் இரவு தூங்கினார். பின்னர் நேற்று காலை சரஸ்வதி வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சரஸ்வதியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அதில் தலையணை அடியில் 50 பவுன் நகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை ஒன்று மாயமாகி உள்ளது.
மேலும் கருப்பு துணி ஒன்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.