உள்ளூர் செய்திகள்
பிரம்மதேசம் அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
- அருள் (எ) சந்தானம் என்ற பெயரிலான பெண், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
- குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டர் உத்தரவிட்டார்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நல்லாளம் கிராமத்தில் அருள் (எ) சந்தானம் என்ற பெயரிலான பெண், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடபட்டு வந்தார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் அருளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து பிரம்மதேசம் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்