உள்ளூர் செய்திகள்
- அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகேயுள்ள இடையூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் கிருஷ்ணகிரி-தருமபுரி சாலையில் பையூர் என்கிற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.