உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதி பெண் சாவு

Published On 2023-10-10 15:02 IST   |   Update On 2023-10-10 15:02:00 IST
  • உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது பரிதாபம்
  • கணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 தருமபுரி,  

 தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, அதிகாரப்பட்டி அருகே உள்ள செங்காட்டு புதூர், கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மனைவி தீர்த்தம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இவர் நேற்று காலை கல்லாத்து காடு கிராமத்தில் உறவினரின் இறப்பு சடங்கிற்கு செல்வதற்காக மனைவி யுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது அரூர்-சேலம் மெயின் ரோட்டில் உள்ள அதிகாரப்பட்டி பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் பள்ளிப்பட்டி செல்வதற்கு நின்று கொண்டிருந்தபோது திருப்பத்தூர் வரை செல்லும் தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக சிவராஜ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தீர்த்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News