உள்ளூர் செய்திகள்

திறந்துகிடந்த மழைநீர் ஓடையில் விழுந்து பெண் காயம்- தடுப்பு வேலிகள் அமைக்காததால் தொடரும் விபத்துகள்

Published On 2023-10-21 08:26 GMT   |   Update On 2023-10-21 08:26 GMT
  • பலமுறை கோரிக்கை விடுத்தும், கண்டோன்மென்ட் வாரியம் தடுப்புகளை அமைக்கவில்லை.
  • ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இப்படித்தான் ஆபத்து நேரிடுகிறது.

சென்னை:

பல்லாவரம் கண்டோன் மென்ட் பகுதியில் பஜனை கோவில் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

இன்னும் பணிகள் நிறைவடையாமல் திறந்து கிடக்கின்றன. கம்பிகளும் ஆங்காங்கே வெளியே நீண்டு நிற்கின்றன. அந்த பகுதி குடியிருப்பு பகுதி என்பதால் சிலர் மரப்பலகைகளை போட்டு ஓடையை கடக்கிறார்கள்.

பம்மலை சேர்ந்த விஜயகுமாரி (56) அந்த வழி யாக சென்ற போது தவறி ஓடைக்குள் விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு சிலர் ஓடி சென்று காப்பாற்றி இருக்கிறார்கள். ஓடைக்குள் விழுந்த விஜய குமாரியின் உடலில் சில இடங்களில் கம்பி குத்தி கிழித்து காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி விஜயகுமாரி கூறும்போது, "குழியை கடக்க ஒரு சில இடங்களில் மரப்ப லகைகளை வைத்து உள்ளனர். ஒரு பலகையில் நடந்து சென்ற போது தவறி விழுந்தேன். பலமுறை கோரிக்கை விடுத்தும், கண்டோன்மென்ட் வாரியம் தடுப்புகளை அமைக்கவில்லை. நான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்." என்றார்.

பம்மலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பார்த்திபன் கூறுகையில், "பருவமழை நெருங்கி வருவதை அறிந்திருந்தும், அதிகாரிகள் மூன்று வாரங்களுக்கு முன்பு பணிகளைத் தொடங்கினர். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இப்படித்தான் ஆபத்து நேரிடுகிறது" என்றார்.

Tags:    

Similar News