திருவெண்ணைநல்லூர் அருகே தூக்குபோட்டு பெண் தற்கொலை
- சோனியா காந்திக்கு அடிக்கடி வயிற்று வலி வருவது வழக்கம்.
- மன உளைச்சலில் நேற்று வீட்டில் தனது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே அம்மாவாசை பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கூத்தன். இவரது மனைவி சோனியாகாந்தி (வயது 26) இருவருக்கும் இடையில் 7 வருடம் முன்பு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோனியா காந்திக்கு அடிக்கடி வயிற்று வலி வருவது வழக்கம். வயிற்று வலியால் பெரிதும் அவதிப்பட்டு வந்த சோனியாகாந்தி மன உளைச்சலில் நேற்று வீட்டில் தனது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அக்கம்பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த சோனியா காந்தியின் தந்தை கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.