உள்ளூர் செய்திகள்

திருமணமாகி 2 வருடங்களில் பெண் தற்கொலை

Published On 2023-01-27 15:34 IST   |   Update On 2023-01-27 15:34:00 IST
  • பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என்றும் கூறப்படுகிறது.
  • லட்சுமி வீட்டில் யாருமில்லாதபோது தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள ஜே.காரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 21).

இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் லட்சுமி தீராத வயிற்று வலியால் தவித்து வந்ததாகவும், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் லட்சுமி வீட்டில் யாருமில்லாதபோது தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை பெரியசாமி கெலமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகி 2 வருடங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News