உள்ளூர் செய்திகள்
முகத்தில் மிளகாய் பொடி தூவி தாக்கிய பெண் கைது
- வெங்கட லட்சுமியை அவரது உறவினர்களான லட்சுமி, கல்யாணி இருவரும் சேர்ந்து தாக்கி, சுடு தண்ணீ ரில் மிளகாய் பொடி தூவி முகத்தில் ஊற்றியுள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், காமன்தொட்டி அடுத்த பாதக்கோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடலட்சுமி(வயது48). இவரது பூர்வீக நிலம் கிருஷ்ணகிரி அடுத்த பாலக்குறி கிராமத்தில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த, 17-ந் தேதி இரவு வெங்கட லட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் அவரது உறவினர்கள் மாடுகளை கட்டி மேச்சலுக்கு விட்டுள்ளனர். இது குறித்து தட்டி கேட்ட வெங்கட லட்சுமியை அவரது உறவினர்களான லட்சுமி (60), கல்யாணி (32) இருவரும் சேர்ந்து தாக்கி, சுடு தண்ணீரில் மிளகாய் பொடி தூவி முகத்தில் ஊற்றியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த வெங்கட லட்சுமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்து அங்கிருந்து கொடுத்த புகார்படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர்.