உள்ளூர் செய்திகள்

ஆற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள்.

ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயதாமரை அகற்றப்படுமா?

Published On 2023-11-17 09:49 GMT   |   Update On 2023-11-17 09:49 GMT
  • நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • மகிமலை ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்துள்ளது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி காழியப்பன்நல்லூர், எருக்கட்டாஞ்சேரி, பொறையார், காட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்த நிலையில் இப்பகுதியில் வடிகால் மற்றும் பாசனவாய்க்காலுக்கு தண்ணீர் வரும் மகிமலை ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து இருப்பதால் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டும் தண்ணீர் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மதகுகளில் ஆகாயத்தாமரை செடி கொடிகள் படர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்வதில் தேக்க நிலை ஏற்படுகிறது .

எனவே பருவ மழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்படும் முன்பே தேங்கியுள்ள ஆகாயத்தாமரை, செடி கொடிகளை அகற்றி சம்பா பயிர்களை காப்பாற்ற பொதுப்பணித்துறையினர் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News