உள்ளூர் செய்திகள்

மயிலாடும்பாறை - வண்ணாத்தி பாறை இடையே உள்ள சேதமடைந்த சாலை.

மயிலாடும்பாறை-வண்ணாத்திபாறை சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் தவிப்பு

Published On 2022-12-09 11:16 IST   |   Update On 2022-12-09 11:16:00 IST
  • சுமார் 3 கி.மீ தொலைவில் சாலை போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சேதம் அடைந்து குண்டும் குழியும் காணப்படுகிறது.
  • விவசாயிகளின் நலன் கருதி சிறப்பாறை - வண்ணத்திப்பாறை இடையே புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வருசநாடு:

மயிலாடும்பாறை அருகே வண்ணாத்திபாறை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிறப்பாறை முதல் வண்ணத்திப்பாறை வரையிலான சுமார் 3 கி.மீ தொலைவில் சாலை போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சேதம் அடைந்து குண்டும் குழியும் காணப்படுகிறது.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் தற்போது வரை தார் சாலை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.‌

இதனால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகிறது. மேலும் சேதமடைந்த சாலை காரணமாக விவசாய விளை பொருட்களை தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்ப சிரமம் ஏற்படுவதால் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட அதிகாரிகள் விவசாயிகளின் நலன் கருதி சிறப்பாறை - வண்ணத்திப்பாறை இடையே புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News