உள்ளூர் செய்திகள்

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை படத்தில் காணலாம்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே குறிஞ்சிகுடி பேரூர் சாலை சரி செய்யப்படுமா?

Published On 2023-06-27 13:07 IST   |   Update On 2023-06-27 13:07:00 IST
  • நந்தீஸ்வர மங்களம் வழியாக குறிஞ்சிகுடி, பேரூர் ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்கு ஏதுவான சாலையாக உள்ளது.
  • பள்ளி திறந்து விட்டதால் இந்த சாலையை சரி செய்ய வேண்டும்

கடலூர்: 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வலசக்காடு, பேரூர் ஊராட்சியின் இணைப்பு சாலையாக உள்ள குறிஞ்சிகுடி, பேரூர் சாலை பல ஆண்டு காலமாக சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இந்த சாலை சேத்தியாதோப்பு- கும்பகோணம் நெடுஞ்சாலையில் இருந்து நந்தீஸ்வர மங்களம் வழியாக குறிஞ்சிகுடி, பேரூர் ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்கு ஏதுவான சாலையாக உள்ளது. இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிளும் மற்றும் பள்ளி வாகனங்களும் சிதம்பரம் வலசாக்காடு நகர பஸ், விருத்தாச்சலம் வலசாக்காடு நகர பஸ்கள் வலசாகாடு, குறிஞ்சிகுடி பேரூர் வழியாக தினம் சென்று வருகின்றன. இந்த சாலையானது மிக மோசமான நிலையில் உள்ளன.

இந்த சாலை இருபுறங்கிலும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பகல், இரவு நேரங்களில் பொது மக்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். பள்ளி திறந்து விட்டதால் இந்த சாலையை சரி செய்தால் பள்ளி மாணவ- மாணவிகள் பயமின்றி சென்று வரவும், பள்ளி வாகனங்கள் மற்றும் நகரப் பஸ்கள் பழுதடையாமல் செல்வதற்கும் பேர் உதவியாக இருக்கும் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு குறிஞ்சிகுடி பேரூர் சாலையை சரி செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Tags:    

Similar News